Breaking News தேசிய விவசாயிகள் தினம் இன்று (23 Dec ) மும்பையில் பயங்கர​ தீவிபத்து 12 பேர் பலி குஜராத் தேர்தலில் பா.ஜ.க​ முன்னிலை

L

Local News

ஒரு கோல்; கோல்கட்டா அணி வெற்றி.

 17th January, 2018  

ஐ.எஸ்.எல் தொடரின் 4 வது சீசன் அசாமின் கவுகாத்தியில் நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா மற்றும் வடகிழக்கு யுனைடெட் அணியும் மோதியது. இதில் முதல் பாதி முடிவில் இரு அணியும் கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. கோல்கட்டா அணி இரண்டாவது பாதியில் 73 வது நிமிடத்தில் ஜிகுவின்ஹா ஒரு கோல் அடித்தார். இதற்கு எதிர் அணியினர் பதிலடி தரமுடியவில்லை. எனவே கோல்கட்டா அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 3வெற்றி, 3தோல்வி, 3 'டிரா' உட்பட 12 புள்ளிகளுடன் 6 வது இடத்தில் உள்ளது கோல்கட்டா அணி. வடகிழக்கு அணி 7 புள்ளிகளுடன், 9 வது இடத்தில் உள்ளது. முதல் மூன்று இடங்களில் முறையே பெங்களூர் (18), சென்னை(17), புனே(16) புள்ளிகளுடன் இந்த அணிகள் உள்ளது.

பாடலாசிரியர் வைரமுத்திற்கு எதிரான போராட்டம்.

 17th January, 2018  

பாடலாசிரியர் வைரமுத்து சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் ஆண்டாள் குறித்து அவதூறாக பேசினார். இதற்கு இந்து மக்கள் கடும் எதிப்பு தெரிவித்து "பிழைப்பிற்காக பெண்களை வர்ணித்து பாட்டு எழுதும் இவருக்கு ஆண்டாள் குறித்து அவதூறாக பேச எந்த தகுதியும் இல்லை என்றும், அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் மெரினாவில் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டது. தற்போது அவருக்கு எதிராக 'வாழ்க இந்து நீதி தர்மம்' எனும் தலைபில் ஜீயர்கள் மடாதிபதிகள் , சிவாச்சாரியார்கள், இந்து அமைப்புகள், ஆன்மிக நல விரும்பிகள் நேற்று சென்னை அரசு விருந்தினர் மாளிகை அருகில் பிரமாண்ட கூட்டத்தில் பங்கேற்றனர். இதனை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் சன்னதியில் உண்ணாவிரத போராட்டம் இன்று காலை முதல் துவங்கியது. இதனால் சென்னை மற்றும் விருதுநகரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல்: போலீசாரின் முன்னேற்பாடுகள்.

 17th January, 2018  

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்களது சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் இன்று காலை சென்னைக்கு திரும்பி உள்ளதால் பல இடங்களில் போக்குவரத்து முடங்கி உள்ளது. இதனால் மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இன்று பள்ளிகள், அலுவலங்கள் விடுமுறை முடிந்து வழக்கம் போல் திறக்கிறது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் முன்னேற்பாடுகளை செய்திருந்தனர். இருந்தாலும் சென்னை, கோயம்பேடு மற்றும் தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது

அரசு பேருந்துகள் இன்று முதல் வழக்கம் போல் இயங்கும்.

 12th January, 2018  

ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடத்திய போருந்து நிறுத்த போராட்டம் நேற்று அரசுடன் நடந்த பேச்சு வார்த்தையை அடுத்து தொழில்சங்கம் போருந்து நிறுத்த போராட்டதை வாபஸ் வாங்கிக்கொண்டு நேற்று இரவு பேருந்துகளை இயக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் சென்னையில் 90 சதவீதம் பேருந்துகள் இயங்கும் என்று பேருந்து தொழில்சங்க ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இன்று அதிகாலை முதல் கோயம்பேட்டில் வெளியூர் செல்லும் அனைத்து பேருந்துகள் வழக்கம் போல் இயங்கியுள்ளது. திருச்சியில் நேற்று இரவு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கியுள்ளது.மேலும் சென்னை, நெல்லை, மதுரை, ஆகிய நகரங்களில் அதிகாலை முதல் முழு அளவு பேருந்துகள் இயங்கியுள்ளது.

L

Latest Videos

D

Directory

 mylaporetoday.com
 mylaporetoday.com
 mylaporetoday.com
 mylaporetoday.com
 mylaporetoday.com
 mylaporetoday.com