Breaking News வைகை ஆற்றில் வெள்ளம் குற்றாலத்தில் வெள்ளம் சுற்றுலா பயணிகள் குளிக்க​ தடை கனமழை காரணமாக​ 13 மாவட்ட​ பள்ளிகளுக்கு விடுமுறை

L

Local News

ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிட விஷால் வேட்புமனு நிராகரிப்பு


ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட​ விஷால் நேற்று முன் தினம் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் மனுவை மீண்டும் தேர்தல் ஆணையம் நிராகரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விஷாலின் வேட்பு மனுவில் போலி கையெழுத்து இருப்பதாக தேர்தல் நடத்தும் வேலுசாமியிடம் அதிமுகவினர் மனு அளித்தனர். இதற்கு ஆதாரமாக இரண்டு பேரின் ஒப்புதல் கடிதத்தையும் கொடுத்தனர். இதனையடுத்து மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் ஆவேசம் அடைந்த விஷால் முன்மொழிந்தவர்கள் மிரட்டப்படும் தேர்தல் ஆடியோவை தேர்தல் அலுவலகரிடம் ஒப்படைத்தார். இதனால் விஷால் மனுவை ஏற்பதாக வேலுசாமி அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக வேட்பாளர் மதுசூதனன் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து விஷாலை முன்மொழிந்த 2 பேரை மீண்டும் கொண்டு சென்று வேலுசாமி முன் அதிமுகவினர் நிறுத்தினர். விஷால் மனுவில் இருப்பது தங்களது கையெழுத்து இல்லை என இருவரும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கூறியுள்ளனர். அதனால் விஷால் விண்ணப்பத்தை தள்ளுபடி செய்வதாக வேலுசாமி கூறியுள்ளார்.

Share

L

Latest Videos