Breaking News வைகை ஆற்றில் வெள்ளம் குற்றாலத்தில் வெள்ளம் சுற்றுலா பயணிகள் குளிக்க​ தடை கனமழை காரணமாக​ 13 மாவட்ட​ பள்ளிகளுக்கு விடுமுறை

L

Local News

கடனை திருப்பி செலுத்தாமல் தவறாக​ பயன்படுத்திய​ விஜய் மல்லயா


கர்நாடகாவை சேர்ந்த மதுபான தொழிலதிபர், விஜய் மல்லையா, விமான சேவை நிறுவனம் துவங்க, வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கினார். அந்த பணத்தை திருப்பிச் செலுத்தாமல், பிரிட்டனுக்கு மல்லையா தப்பியோடினார். அவரை அங்கிருந்து நாடுகடத்தக்கோரி, பிரிட்டன் நீதிமன்றத்தில், மத்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை, பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டதாவது: ஸ்டேட் பேங்க் மற்றும் ஐடிபிஐ வங்கியில், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் குறித்து பொய்யான தகவலை கூறி ரூ.9 ஆயிரம் கடன் பெற்றார்.அந்த கடனை திருப்பி செலுத்தாமல், தவறாக மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் தனது சொந்த பயன்பாட்டுக்கு உள்ள விமானங்ளுக்காக செலவழித்தார், என்று அவர் வாதிட்டார்.

Share

L

Latest Videos