Breaking News வைகை ஆற்றில் வெள்ளம் குற்றாலத்தில் வெள்ளம் சுற்றுலா பயணிகள் குளிக்க​ தடை கனமழை காரணமாக​ 13 மாவட்ட​ பள்ளிகளுக்கு விடுமுறை

L

Local News

நாட்டின் முதல் ரயில்வே பல்கலை. அமைக்க​ ஒப்புதல்


கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பா.ஜ.அரசு பொறுப்பேற்றதும் ரயில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது போது பிரதமர் மோடி பேசுகையில், ரயில்வே துறையை நவீனமயமாக்கி ரயில்வே துறையில் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்திட ரயில்வே பல்கலை. துவக்குவது குறித்து பேசினார். கடந்த மூன்று ஆண்டுகளாக கிடப்பில் இருந்த​ இந்த திட்டம். தற்போது உயிர் கொடுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காக கடந்த மூன்று மாதங்களாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், ரயில்வே வாரிய தலைவர் அஷ்வனி லோஹானி ஆகியோர் இதற்கான முயற்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக வரும் 7-ம் தேதி நடக்க உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ரயில் பல்கலை. துவக்க ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாகவும். இதையடுத்து நாட்டின் முதன்முறையாக ரயில்வே பல்கலை. துவக்கப்பட்டு 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் வகுப்புகள் துவங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share

L

Latest Videos