Breaking News தேசிய விவசாயிகள் தினம் இன்று (23 Dec ) மும்பையில் பயங்கர​ தீவிபத்து 12 பேர் பலி குஜராத் தேர்தலில் பா.ஜ.க​ முன்னிலை

L

Local News

சுற்றுலா செல்வதற்கு முன் உயரதிகாரிகளிடம் தெரியபடுத்தி அனுமதி பெற வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் முடிந்ததும் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம். இதற்கு கல்வித்துறை அவ்வப்போது மாணவர்கள் பாதுகாப்பு கருதி பல்வேறு உத்தரவுகளை பிறப்பிக்கும். சில தினங்களுக்கு முன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், தொடக்க கல்வி அலுவலர் மூலம் தலைமை ஆசிரியருக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் , "பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்ல வேண்டும் எனில் உயரதிகாரிகளிடம் அந்த இடம் மற்றும் நாட்கள் குறித்த விவரங்களை தெரியப்படுத்தி, அனுமதி பெற வேண்டும். குழந்தைகளின் பெற்றோருக்கும் ,பாதுகாவலருக்கும், இடம் பற்றிய விவரங்களை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். மாணவியர்களை பெண் ஆசிரியர்கள் அழைத்து செல்ல வேண்டும். ஆபத்தான இடங்களுக்கு மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்லக்கூடாது , விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தலைமையாசிரியருக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Share

L

Latest Videos