Breaking News தேசிய விவசாயிகள் தினம் இன்று (23 Dec ) மும்பையில் பயங்கர​ தீவிபத்து 12 பேர் பலி குஜராத் தேர்தலில் பா.ஜ.க​ முன்னிலை

L

Local News

தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதிக்கு சரிதா தேவி மற்றும் சோனியா தேர்வு


ஹரியானாவில் உள்ள ரோதக் நகரில் பெண்களுக்கான தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் அனைத்து இந்திய போலீஸ் அணியின் சரிதா தேவி 60 கி.கி எடைப்பிரிவு காலிறுதில் அருணாசல பிரதேசத்தின் அகுய்லியா துபாக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினர். இதற்கு பிறகு ரயில்வே அணியின் சோனியா, உத்ரகாந்த் அணியின் கம்லா பிஷ்ட்டை 57 கி.கி எடைப்பிரிவு காலிறுதியில் தோற்க்கடித்து 5-0 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு நுழைந்தனர். நிகாத் ஐரீன்(51கி.கி), ரயில்வே அணி பவித்ரா (60 கி.கி ), மணிப்பூரின் சர்ஜீ பாலா தேவி (48கி.கி) என மற்ற எடைப்பிரிவு காலிறுதியில் அசதி அரையிறுதிக்கு முன்னேறினர். ரயில்வே அணியின் ஷிக்சா, பஞ்சாப் வீராங்கனை ஷவிந்தர் கவுர் சித்தரிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.

Share

L

Latest Videos