Breaking News வைகை ஆற்றில் வெள்ளம் குற்றாலத்தில் வெள்ளம் சுற்றுலா பயணிகள் குளிக்க​ தடை கனமழை காரணமாக​ 13 மாவட்ட​ பள்ளிகளுக்கு விடுமுறை

L

Local News

ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய ரஷியாவுக்கு குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தடை


அனைத்துலக ஒலிம்பிக் குழு நடத்தும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி, அடுத்த ஆண்டு தென் கொரியாவில் நடைபெற உள்ளது. இந்த​ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்குத் தடை விதித்துள்ளது. சர்வதேச தடகள மற்றும் விளையாட்டு போட்டிகளில் ரஷ்ய வீரர்கள் ஊக்கமருந்து எடுத்து கொள்வதும் தடைக்கு ஆளாவதும் சமீபகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு சோச்சி நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ரஷிய வீரர், வீராங்கனைகள் ஊக்க மருந்து எடுத்து கொண்டதாகவும் அந்நாட்டு அரசே உதவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக ரஷிய வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த​ ஒலிம்பிக் போட்டியில் ரஷிய கொடி இடம் பெறாததுடன் அந்நாட்டு தேசிய கீதமும் ஒலிக்கப்போவதில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது

Share

L

Latest Videos