Breaking News தேசிய விவசாயிகள் தினம் இன்று (23 Dec ) மும்பையில் பயங்கர​ தீவிபத்து 12 பேர் பலி குஜராத் தேர்தலில் பா.ஜ.க​ முன்னிலை

L

Local News

புரோ மல்யுத்த லீக் தொடரில் மும்பை அணி வென்றது.


டில்லியில் நேற்று புரோ மல்யுத்த லீக் தொடரின் மூன்றாவது சீசன் துவங்கியது. இதில் மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கும் லீக் போட்டியில் நேற்று மும்பை மற்றும் டில்லி அணிகள் மோதியது. இரு அணிகளும் முதல் நான்கு போட்டிகள் முடிவில் 2-2 என சம நிலையில் இருந்தது. மும்பை வீரர் சதேந்தர் மாலிக், அடுத்து நடந்த 125 கி.கி போட்டியில் 7-6 என வெற்றி பெற்றார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 62 கி.கி, எடைப்பிரிவில் மும்பை அணியின் கேப்டன், டில்லி அணியின் மோனியாவை 18-2 என சாய்த்தார். இறுதி போட்டியில் ராமோனவ் வெற்றி பெற்றதால் மும்பை அணி 5-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

Share

L

Latest Videos