Breaking News வைகை ஆற்றில் வெள்ளம் குற்றாலத்தில் வெள்ளம் சுற்றுலா பயணிகள் குளிக்க​ தடை கனமழை காரணமாக​ 13 மாவட்ட​ பள்ளிகளுக்கு விடுமுறை

L

Local News

நிலக்கரி ஊழல் வழக்கில் டிசம்பர் 13 தீர்ப்பு


ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2007-ம் ஆண்டு வடக்கு ராஜ்ஹாரா பகுதியில் உள்ள​ நிலக்கரி சுரங்கங்களை கோல்கட்டாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கியது. இதில் பெருமளவு ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இதனை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்து வரும் இந்த வழக்கில் முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் மதுகோடா, முன்னாள் நிலக்கரி்த்துறை செயலர் குப்தா உள்ளிட்ட எட்டு பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் எட்டு பேரும் ஜாமினில் உள்ளனர். இந்த வழக்கின் விசாரணையில் சாட்சியங்கள் அனைத்தும் விசாரிக்கப்பட்டுவிட்டன. இதையடுத்து டிசம்பர் 13-ம் தேதி இந்த​ வழக்கிற்கான​ தீர்ப்பு வெளியாக​ உள்ளது.

Share

M

More News

  2017-04-27 10:09:47 

Sasikala banners are removed

  2017-04-26 11:29:24 

Delhi Police arrest Dinakaran

  2017-04-25 11:36:19 

Prisoners turned farmers !

  2017-04-25 10:58:21 

Kodai Nataka Vizha 2017

  2017-04-25 10:37:44 

Hamsanadam Music School

L

Latest Videos