Breaking News தேசிய விவசாயிகள் தினம் இன்று (23 Dec ) மும்பையில் பயங்கர​ தீவிபத்து 12 பேர் பலி குஜராத் தேர்தலில் பா.ஜ.க​ முன்னிலை

L

Local News

பேருந்து ஊழியர்கள் 8 வது நாளாக வேலைநிறுத்த போராட்டம்.


அரசுடன் நடக்கும் பேச்சுவார்த்தை சரியாக அமையாததால் பேருந்து ஊழியர்களின் 8வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் தொடர்கிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள், பொது மக்கள் என அனைவரும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனால் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு விடுமுறையும், கல்லூரிகளில் தேர்வு ஒத்திவைப்பு செய்யப்பட்டுள்ளது. அரசு பேருந்துகள் இன்னும் சில பகுதிகளில் இயங்களால் உள்ளது. இதனால் பொது மக்கள் ஷார் ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்களில் அதிக கட்டணம் கொடுத்து பயணம் செய்கின்றனர். பேருந்து ஊழியர்கள் அரசிடம் 2.57% உதிய உயர்வு கேட்கப்பட்ட நிலையில் 2.44% கொடுக்க ஒப்பு கொண்டது. ஆனால் பேருந்து ஊழியர்கள் இதனை மறுத்து போராட்டத்தை தொடர்கின்றனர். திருச்சியில் 60 சதவீதமும், புதுக்கோட்டையில் 70 சதவீதமும், கன்னியாகுமரியில் 40 சதவீதமும் பேருந்துகள் இயங்குகின்றன. அரசுடன் பேருந்து ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அரசு பேசினால் போராட்டம் கைவிடப்பட வாய்ப்பு உள்ளது என கூறுக்கின்றனர். இந்நிலையில் உயர்நிதிமன்றத்தில் போக்குவரத்து ஊழியர்கள் நடத்தும் வேலை நிறுத்த போராட்டம் குறித்து விசாரணை நடத்த உள்ளது என தெரிகிறது.

Share

M

More News

L

Latest Videos