Breaking News சிவகங்கை: தனியார் ஜவுளிக்கடையில் ஐ.டி. ரெய்டு நிறைவு கச்சத்தீவு திருவிழா: மீனவர்கள் புறப்பட்டனர் சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு பஸ் டிரைவர் தாக்குதல் சம்பவம்; 6 வக்கீல்களிடம் விசாரணை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு காவிரி விவகாரம்: இன்று அனைத்துக்கட்சி கூட்டம் திண்டுக்கல்: மரக்கடையில் தீ விபத்து ‛அறம் வளர்த்த நாயகன்' கமல் : டி.என்.சேஷன் பயங்கரவாதியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட கனடா பிரதமரின் மனைவி 10 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் கடும் சரிவு : 65.06

L

Local News

நிரவ் மோடி: பிடிக்க முடியாது என்று கூறினார்.....

 23rd February, 2018  

நிரவ் மோடியின் மோசடி பற்றி சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கின் ஒரு நடவடிக்கையாக அவருக்கு சொந்தமான இடங்கள், கடைகள், அலுவலங்கள் என அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர். நிரவ் மோடியும், சோக்சியும் முதலீடு செய்திருந்த 'மியூச்சுவல் பண்டு" மற்றும் நிறுவன பங்குகளில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. அவரது நிறுவனத்திற்கு சொந்தமான 9 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி 1200 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித்துறை பறிமுதல் செய்தது. 11 கோடி மோசடி செய்த நிரவ் மோடி அமலாக்கத்துறை முன் ஆஜராக மாட்டேன் என்று இ.மெயில் மூலம் தெரிவித்துள்ளார்.

குறிஞ்சி மலர்கள் ஊட்டி -மஞ்சூர் சாலைகளில் பூத்துள்ளது...

 23rd February, 2018  

குறிஞ்சி சங்க கால இலக்கியங்களில் இடம்பெற்ற மலர். இது அரிய வகை மலராக கருதப்படுகிறது. இந்த மலர்கள் பொதுவாக மலைகள் மற்றும் சரிவுகளில் அதிகளவில் வளரக்கூடியது. சில சமயங்களில் மலை முழுவதும் பூத்து குலுங்கும். இதில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை முதல் 36 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பல வகையான குறிஞ்சி மலர்கள் உள்ளன. இதில் 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் சிறப்பு வாய்ந்தது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் 30 வகையான குறிஞ்சி மலர்கள் பூக்கின்றன. இந்த மலர்கள் மலை சரிவு முழுவதும் பூத்தால் அந்த மலையே நீல நிற கம்பளம் விரித்து போல் காட்சியளிக்கும். தற்போது இந்த வகையான குறிஞ்சி மலர்கள் நீலகிரி மாவட்டம் ஊட்டி -மஞ்சூர் சாலைகளில் குந்தா மற்றும் மெரிலேண்ட் மலை சரிவுகளில் பூத்துள்ளன. சாலை ஓரம் பூத்துள்ள மலர்களை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

கோவில்களில் நெய் தீபம் ஏற்ற தடை....

 23rd February, 2018  

அறநிலையத்துறை கமிஷனர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதால் மற்ற கோவில்களில் தீ விபத்து ஏற்படாதவாறு கோவில்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அறநிலையத்துறை கமிஷனர் கூறுகையில்: கோவில் வளாகத்தில் தீத்தடுப்பு கருவிகள் பொறுத்த வேண்டும் என்றும், தீவிபத்து ஏற்பட்டால் உடனடியாக தடுப்பது குறித்து கோவில் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். கோவில்களில் பக்தர்கள் நெய் தீபங்களை பல்வேறு இடங்களில் ஏற்றுவதால் தூண்கள், தளம் ஆகிய பகுதிகள் எண்ணெய் படிந்து அசுத்தமாகிறது. மேலும் இது தீ விபத்துக்கு வழிவகுப்பதால் நெய் தீபம் ஏற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பான அணையா தீபம் அமைத்து பக்தர்கள் கொண்டு வரும் நெய்,எண்ணெய் ஆகியவை அதில் ஊற்ற ஏற்பாடு செய்ய வேண்டும். கோவிலுக்கு வெளியே உள்ள அனைத்து கடைகளையும் அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளார். கோவில்களில் மின்கசிவு, வயரிங் மற்றும் மின் சாதனங்களை ஆய்வு செய்து புதுப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

பக்தரின் நம்பிக்கையில் ஷீரடி சாய் பாபா...

 22nd February, 2018  

பாபா நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் பக்தன் தன் முன்னிலையில் இருக்கும் போது பாபாவின் அன்பின் வேகமும் சக்தியும் ஒன்றுபோலவே இருக்கும். அவரின் திருவருள் வெளிவருவதற்கு பக்தன் முறையாக பிராத்தனை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கட்டும், பின்னர் எங்கு அலைந்து திரிந்தாலும் அரும்புரியும் ஷீரடி இறைவனின் சக்தியை உணர முடியும். அவர் உடலுடன் வாழ்ந்த காலத்தில் ஷீரடியில் அமர்ந்தவாறு தனி ஒருவராக பம்பாய், பூனா உட்பட நாட்டின் பல்வேறு பாகங்கள் எங்கும் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்களின் தேவைகளையும், நல்வாழ்வையும் அவர் கவனித்து வந்தது நன்கு விளங்கியது. இன்றும் நம்பிக்கையுடன் அழைக்கும் பக்தன் முன் பாபா தோன்றுகிறார். நான் உன்னை கவனித்து கொள்கிறேன் என்று கூறுகிறார். நமது சிந்தனை எல்லாம் பாபாவை பற்றியதாக இருக்கும் போது மற்ற எதை பற்றியும் கவலை கொள்ள தேவையில்லை. குறிப்பாக காரியம் நடக்குமா நடக்காத என்று குறி கேட்பதோ,ஜோதிடம் பார்ப்பது போன்றவை பாபா மீது நம்பிக்கை இல்லாததை காட்டும். நம்பிக்கை உள்ள எல்லா பக்தனிடமும் பாபாவின் பார்வை இருக்கும்.

L

Latest Videos

D

Directory

 mylaporetoday.com
 mylaporetoday.com
 mylaporetoday.com
 mylaporetoday.com
 mylaporetoday.com
 mylaporetoday.com

N

News Letter

×