Breaking News இரட்டை இலை சின்னம் யாருக்கு இன்று முடிவு சென்னையில் மீண்டும் மழை ரூ.5 க்கு 4ஜிபி டேட்டா : ஏர்டெல் அதிரடி சலுகை

L

Local News

சாய்னா, சிந்து வெற்றியுடன் ஹாங்காங் பாட்மின்டன் துவக்கம்

 23rd November, 2017  

ஹாங்காங்கில் உள்ள கவ்லுான் பகுதியில் சர்வதேச ஓபன் பாட்மின்டன் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாய்னா, டென்மார்க்கின் மெட்டே போல்சனை எதிர் கொண்டார். 46 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், சாய்னா 21–19, 23–21 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். அதேபோன்று மற்றொரு போட்டியில் இந்தியாவின் சிந்து, ஹாங்காங்கின் லியாங்கை சந்தித்தார். 26 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில், சிந்து 21–18, 21–10 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார்.

தனியார் கல்லூரி மாணவி தற்கொலை, விடுதிக்கு தீவைப்பு

 23rd November, 2017  

சென்னையில் சோழிங்கநல்லுார் பகுதியில் உள்ள, சத்யபாமா பொறியியல் கல்லுாரியில் மாணவி தற்கொலை, மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் தீவைப்பு, தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்தவர், ராஜரெட்டி, 50. அவரது மகள், ராக மவுனிகா,19; மகன், ராகேஷ், 19 இருவரும் இரட்டையர்கள். இவர்கள் இருவரும் சத்யபாமா பொறியியல் கல்லுாரியில் பி.இ முதலாம் ஆண்டு படித்துவந்தனர். நேற்று நடந்த​ மாதாந்திர​ தேர்வில் ராக மவுனிகா காப்பி அடித்ததை பார்த்த​ ஆசிரியர் மாணவியை கண்டித்து தேர்வு அறையை விட்டு வெளியே அனுப்பினார். பின்பு விடுதி சென்ற​ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தன் சகோதரருக்கு உங்களை விட்டு பிரியப்போகிறேன் என்று குறுஞ்செய்தி அனுபியதைப் பார்த்து விரைந்த​ சகோதரர் தன் தங்கையை கண்டு கண்ணீர் விட்டார். தகவல் அறிந்து விரைந்த​ சக​ மாணவர்கள் ஆத்திரமடைந்து கல்லூரி விடுதிக்கு தீ வைத்தனர். மாணவியின் உடல் பிரேத​ பரிசோதனைக்காக​ ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலநடுக்க எச்சரிக்கை

 23rd November, 2017  

மிக விரைவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் மிகப் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படும் எனவும், இது மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மேலும், இதற்கு முன் 600 ஆண்டுகளுக்கு முன்னரே உத்தரகாண்ட் மிகப் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது மீண்டும் அதே போன்றதொரு மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். டேராடூனில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பெங்களூரு இந்தியன்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் அஸ்ட்ரோபிசிக்ஸ் பேராசிரியர் விஜோத் கே. கவுர், நிலநடுக்கம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத கட்டிட தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். இதனால் உயிரிழப்புக்கள் அதிக​ அளவிலிருந்து தவிர்க்கப்படும் என்றார். வரவிருக்கும் பேரழிவில் இருந்து மக்களை காக்க தேவையான ஏற்பாடுகளை உத்திரகாண்ட் அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் மற்றும் ஆராச்சியாளர்கள் வழியுறுத்தி உள்ளனர்.

குத்துச்சண்டை காலிறுதிக்கு முன்னேறிய​ 5 வீராங்கனைகள்

 22nd November, 2017  

அசாமின் கவுகாத்தியில் பெண்களுக்கான உலக யூத் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில் 38 நாடுகளில் இருந்து 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். இந்த​ போட்டியின் காலிறுதிக்கு, ஐந்து இந்திய வீராங்கனைகள் முன்னேறினர். இதன் 64 கி.கி., எடைப்பிரிவில், யூத் சர்வதேச சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற இந்தியாவின் அன்குஷிதா போரோ, துருக்கியின் காக்லோவை வென்று, காலிறுதிக்கு முன்னேறினார். மற்ற இரண்டாவது சுற்று போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியாவின் ஷாஷி சோப்ரா (57 கி.கி.,), சாக் ஷி சவுத்ரி (54 கி.கி.,), ஜோதி குலியா (51 கி.கி.,), நீத்து (48 கி.கி.,) காலிறுதிக்கு தகுதி பெற்றனர். நேகா யாதவ் (+81 கி.கி.,), அனுபமா (81 கி.கி.,) என, இருவரும் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

L

Latest Videos

D

Directory

mylaporetoday.com
mylaporetoday.com
mylaporetoday.com
mylaporetoday.com
mylaporetoday.com
mylaporetoday.com

E

Events

Product Management Workshop

   Sep 11 2017      0 Comments
The Executive Zone The Executive Zone, Shakti Tower - 1, GF, 766 Anna Salai, Mount Road, Next To Spencer Plaza, Anna Salai, Chennai

2nd Chennai UI/UX Confluence – Design Is In Our DNA

   Sep 07 2017      0 Comments
DCKAP L76A DCKAP L76A, L Block, 21st Street, Anna Nagar East , Near Chinthamani Chennai

Gold crown package at vgp universal kingdom

   Sep 07 2017      0 Comments
VGP Universal Kingdom VGP Universal Kingdom, East Coast Road, Injambakkam, Chennai

Film Making Meet

   Sep 08 2017      0 Comments
Phoenix Marketcity Phoenix Marketcity 142, Velachery Main Road, Near Gurunanak College, Velachery Chennai

N

News Letter

×